பதிவு செய்த நாள்
18
பிப்
2023
04:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் ஆறாவது நாள் மகா சிவராத்திரி விழா விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. சைவக் கோயில்களில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயில் பூலோக கைலாசம் என்று பிரசித்தி பெற்றது. பரமேஸ்வரர் பூமி, ஆகாயம், நீர், காற்று, நெருப்பு ஆகிய சக்திகளை தன்னுள் பதித்து லிங்க வடிவில் இங்கு அவதரித்துள்ளார். காஞ்சிபீடம் மத்( பூமி) மண் லிங்கமாகவும்... சிதம்பர க்ஷேத்திரத்தில் ஆகாச லிங்கமாகவும். ஜம்புகேஸ்வரத்தில் ஜல லிங்கமாகவும்... அருணாசலத்தில் அக்னி லிங்கமாகவும்... ஸ்ரீகாளஹஸ்தியில் வாயுலிங்கமாகவும் அருள் பாலித்து வருகிறார் இதற்கு நேரடிச் சான்றாக, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் கருவறையில் உள்ள இரண்டு தீபங்கள் லிங்கத்தின் மூச்சிக் காற்றினால் அசைகின்றன.
இக்கோயிலில் உள்ள லிங்கம் சுயம்புலிங்கம். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் 12ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 13 ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, விஜயநகரத்தின் சாளுவ ராஜா, ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி ஜமீன்தார்களின் ஆட்சியின் போது இந்த கோயில் பல வழிகளில் பல முறை கோயிலை புனரமைத்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரம் தட்சிண கைலாசம், பாஸ்கர க்ஷேத்திரம், அகண்ட பில்வவனம், சத்வோமுக்தி க்ஷேத்திரம் மற்றும் சிவானந்தாயக நிலையம் என்று புராணங்களில் கூறப்படுகிறது. சிலந்தி, பாம்பு, யானை இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு முக்தி பெற்றன. அதனால்தான் இந்தத் தலத்திற்கு ஸ்ரீ (பாம்பு) - காள (பாம்பு) - ஹஸ்தி (யானை) என்று பெயர் வந்தது. சிவபெருமானுக்குக் தன் கண்களைக் கொடுத்து பக்தகண்ணப்பர் என்று பெயர் பெற்றார். அதனால் தான் ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரத்தில் முதல் பூஜையை பக்த கண்ணப்பருக்கு மேற்கொள்கின்றனர். அதன் பிறகு, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோயிலில் பார்வதி தேவி ஞான பிரசுனாம்பிகை தாயாராக அருள் பாலித்து வருகிறார். ஞான பிரசுனாம்பா தேவி தான் பெற்ற அனைத்து அறிவையும் அனைத்து உயிரினங்களுக்கும் பகிர்ந்தளிப்பதாக நம்பப்படுகிறது". அம்மனை தரிசித்தால் அறிவு( ஞானம்)கிட்டும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் இன்று 18.2.2023 மகாசிவராத்திரியை ஒட்டி சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு முன்னதாக கோ பூஜை சுப்ரபாத சேவைகள் நடத்தி மூன்று மணியிலிருந்து பக்தர்களுக்கு சர்வ தரிசனத்திற்கு அனிமல் அனுமதித்தனர் மகா சிவராத்திரி சிறப்பு தினத்தில் லிங்கோத்பவர் தரிசனம் இரவு நள்ளிரவு ஒரு மணியிலிருந்து சாதாரண பக்தர்களுக்கு கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.லிங்கோத்பவ அபிஷேகங்களில் சுவாமி தரிசனம் செய்தால் சுபம் நடப்பது மட்டுமின்றி பக்தர்களின் (விருப்பங்களை) பக்தர்களுக்கு வரங்களை அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அபிஷேக தரிசனத்திற்காக பக்தர்கள் மட்டுமின்றி பிரமுகர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரி அன்று ஸ்ரீகாளஹஸ்தியில் லிங்கோத்பவர் தரிசனத்திற்கு மிகவும் (விசேஷம்) சிறப்பு உள்ளது பிரம்மா விஷ்ணு ஆகியோர் தாங்களேப் பெரியோர்கள் என்பதை தவிர்த்து மூன்று உலகைக் காக்கும் பரமேஸ்வரர் தன்னுடைய சுய(உருவில்) ரூபத்தில் தரிசனம் கொடுக்கும் (சுப சந்தர்ப்பத்தையே) நிகழ்வையே லிங்கோத்பவ தரிசனம் என்பதாகும். காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் ஞானப்ரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர் . கோயில் நிர்வாகம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தது (அனைவருக்கும்) அனைத்து பக்தர்களுக்கும் மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் விரைவு தரிசனம் நடந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர் .மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது.