மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் மாசி முதல் சனிக்கிழமை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2023 05:02
மேட்டுப்பாளையம் அருகில் உள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் மாசி மாத முதல் சனிக்கிழமை விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி திருக்கோயில் உள்ளது. நாடி வரும் பக்தர்களின் துயர் தீர்த்து ஜெய மங்களங்கள் வழங்குவதால் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் மாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் நல்வாழ்வு வாழவும், விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வு ஏற்றம் பெறவும் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு அரசாணிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி தக்காளி போன்ற 36 வகையான காய்கறி மூலம் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மாசி மாத முதல் சனிக்கிழமை விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி திருக்கோயில் உள்ளது. நாடி வரும் பக்தர்களின் துயர் தீர்த்து ஜெய மங்களங்கள் வழங்குவதால் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் மாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் நல்வாழ்வு வாழவும், விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வு ஏற்றம் பெறவும் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு அரசாணிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி தக்காளி போன்ற 36 வகையான காய்கறி மூலம் அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.