காளஹஸ்தி சிவன் கோயிலில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2023 05:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 13ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்து வரும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இன்று ஐந்தாவது நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவத்திற்காக ஆந்திர மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி கோயில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலை மீது சசுமந்தபடி ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபம் வரை கொண்டுச் சென்று அங்கு கோயிலின் பிரதான அர்ச்சகரான விஸ்வநாத குருக்கள் இடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் .இதனைத் தொடர்ந்து சிவன் கோயில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது புதிதாக கட்டப்பட்ட 40 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் சிவன் பார்வதி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு ஏற்பாடுகள் செய்வதின் ஒரு பகுதியாக கோயில் அருகில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலின் மூன்றாவது கோபுரமான சிவ கோபுரம் அருகில் கைலாசம் (செட்டிங் ) போன்ற (செட்டிங்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . அதனையும் இன்று (வெள்ளிக்கிழமை)அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்சார நிலத்தடி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டியுடன் காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எஸ்சிவி நாயுடு உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.