கருப்பராய சாமி கோவில் குண்டம் திருவிழா : பக்தர்களுக்கு மரக்கன்று
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2023 05:02
அன்னூர்: குன்னியூர், கருப்பராயசாமி கோவிலில், குண்டம் திருவிழா நடந்தது.
குன்னியூர், கைகாட்டி அருகே, கருப்பராய சாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் மாசாணி அம்மன் மற்றும் கரிய காளியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு நேற்று குண்டம் திருவிழா நடந்தது. கலாமணி சாமி குண்டம் இறங்கும் வைபவத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு அபிஷேக பூஜை, நடந்தது. அன்னூர், அவிநாசி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் குண்டம் இறங்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அருள் வாக்கு கூறப்பட்டது. வாக்கனாங்கொம்பு கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. இதையடுத்து மூதாட்டிகளுக்கான இலவச காப்பக திறப்பு விழா நடந்தது. இதில் ஆதரவற்ற மூதாட்டிகள் கட்டணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்படுவர், என நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வேம்பு, புங்கன், பூவரசன் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.