பதிவு செய்த நாள்
22
பிப்
2023
08:02
பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் கம்பம் சாட்டும் விழா நடைபெற்றது.
பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா (பிப்,.17ல்) மூகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று (பிப்.,21) காலை கம்பம் தயாரிக்க காணியாளர் அரிவாள் எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மரம் தேர்வு செய்யப்பட்டு கம்பம் தயார் செய்யப்பட்டது. கம்பம் வடிவமைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வையாபுரி கண்மாய், அரசமரத்து வினாயகர் கோயில், படித்துறையில் கம்பம் அலங்கரிக்கப்பட்டது. நேற்று நள்ளிரவிற்கு பிறகு, மாரியம்மன் கோயில் முன், கம்பம் நடப்பட்டு, பூஜைகள் செய்து வழிபாடு நடைபெறும். பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்வர். பிப்., 28 ல் இரவு 7:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்து, கம்பத்தில் பூவோடு வைக்கப்படும். மார்ச.1ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மார்ச்.,7 ல் மாலை 6:40 மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்று, மார்ச்.,8 ல் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. மார்ச்.,9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவு அடையும்.