பதிவு செய்த நாள்
22
பிப்
2023
08:02
கோவை : கோனியம்மன் கோவிலில் நேற்று நடந்த கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.
கோவை, கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று, கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பங்கேற்றனர். பின்னர் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 28ம் தேதி திருக்கல்யாணம், மார்ச் 1ல் திருத்தேரோட்டம், 3ல் தெப்பத்திருவிழா, 4ல் தீர்த்தவாரி, கொடியிறக்கம், 6ம் தேதி வசந்த விழாவுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.