ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10 மணிக்கு, ஆதிரெத்தின குருக்கள் தலைமையில், கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் இரவு, விநாயகர், சிம்ம, மயில், யானை, ரிஷப வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் புவனேஸ்வர குமார், கண்காணிப்பாளர் தேவதாஸ், ரவிகுமார் குருக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.