பதிவு செய்த நாள்
11
செப்
2012
10:09
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் "காந்தி கதை நிகழ்ச்சி, இன்று துவங்குகிறது. தொடர்ந்து செப்.,15 வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை, காந்தியின் வாழ்க்கை, அனுபவங்கள் குறித்த, கதைகள், பாடல்கள் நிகழ்ச்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாராயண் தேசாய் கூறியதாவது:எனது தந்தை மகாதேவ் தேசாய், காந்தியின் செயலாளராக இருந்தவர். 1924 முதல் 1948 வரை, காந்தியுடன் நான் வளர்ந்தேன். தற்போது எனக்கு 88 வயதாகிறது. காந்தியடிகளின் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதியதற்கு, சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. தற்போது "காந்தியின் கதைகள் குறித்த நிகழ்ச்சி நடத்த உள்ளேன். அவரது வாழ்க்கை வரலாறு, அனுபவங்கள், அரசியல் நிகழ்வுகள் குறித்த தகவல்களை, கதையாக கூற உள்ளேன். இடையிடையே பாடல்களும் பாடப்படும், என்றார். அனுமதி இலவசம்.