பதிவு செய்த நாள்
22
பிப்
2023
07:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் (புதன்கிழமை) ஞான பிரசுனாம்பிகாவுடன் காளஹஸ்தீஸ்வரர் கைலாச கிரிவலம் ( பிரதக்ஷனுக்கு) புறப்பட்டார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி அம்மையார்களுடன் திரண்டனர். கைலாசகிரி வலத்தின் போது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு தெரிவித்தார்.
மகா சிவராத்திரியின் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில், சுவாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவத்திற்குத் வருகைப் புரிந்த தேவர்கள், மகரிஷிகள் முனிவர்களை நன்றி தெரிவிக்கும் வகையில் கைலாச கிரி வலம் வந்து விடைப்பெறுவர் இதையொட்டி, கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் வெள்ளி அம்பாரிகளில் சுவாமி அம்மையாரின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் மேள தாளங்கள் முழங்க சிவ நாமங்கள் முழங்க (கிரிபிரதட்சிண) கிரிவலம் தொடங்கியது. காளஹஸ்தி நான்கு மாட வீதிகள் வழியாக 23 கி.மீ.,( கிரிபிரதட்சண ) கிரி வலம் (சுவாமி அம்மையார்கள் புறப்பட்டனர். ) கிருஷ்ணா ரெட்டி மண்டபம், பேரிவாரி மண்டபம், வெலம மண்டபம் மற்றும் சுவாமி அம்மையார்களின் தனித்தனி மண்டபங்களில் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்யப்பட்டு பின்னர் கிரிவலத்தில் பால் கடலில் மகா சிவலிங்கம் சேஷ வாகனத்தில் எழுந்தருளுவது போல் ஏற்பாடு, கோலாட்டம், கேர்ள் மேளங்கள் , பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் என கிரிவலம் தொடர்ந்தன.மேலும் கிரிவலத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் கலந்து கொண்டதோடு முன்னதாக 4 மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா வந்தனர். கிரிவலத்தில் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.