பதிவு செய்த நாள்
22
பிப்
2023
07:02
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 62 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் பொது உண்டியலில், 59 லட்சத்து 64 ஆயிரத்து 836 ரூபாயும், கோசாலை உண்டியலில், 2 லட்சத்து 18 ஆயிரத்து 5 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 28 ஆயிரத்து 304 ரூபாயும் என, மொத்தம், 62 லட்சத்து 11 ஆயிரத்து 145 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, தங்கம், 69 கிராம் 500 மி.கிராமும், வெள்ளி ஒரு கிலோ 810 கிராமும், பித்தளை 10 கிலோ 300 கிராமும் இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணிக்கை, நேற்று முதன்முறையாக ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலின் உப கோவிலான வடவள்ளியில் உள்ள கறி வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில், 36 ஆயிரத்து 698 ரூபாய் காணிக்கையாக இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில், பக்தர் ஈடுபட்டனர்.