நத்தம் மாரியம்மன் கோவில் மாசி விழாவில் கம்பம் ஸ்தாபிதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2023 09:02
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். நேற்று இரவு அம்மன்குளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கம்பத்திற்கு மஞ்சள், சந்தனம் பூசி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க அம்மன் குளத்தில் இருந்து நகர்வலமாக அழைத்து வரப்பட்டது. பின் மாரியம்மன் கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சு நீர், பால் ஊற்றி அம்மனை தரிசித்து வருகின்றனர். மேலும் நேற்று அம்மன் குளத்திலிருந்து அபிஷேக தீர்த்தம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது.