தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயில் மாசி களரி பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பால்குடம், அக்னி சட்டி, எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பாரி வேட்டை விழா நடைபெற்றது. கோவிலில் முன்பு ஆடு, கோழி, சேவல் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.