எமனேஸ்வரம் அங்காளம்மன், குருநாதசுவாமி கோயில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2023 11:02
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமியோடு 21 பந்தி தெய்வங்களின் மாசி மகா சிவராத்திரி பால் குட விழா நடந்தது.
இக்கோயிலில் பிப்., 16 இரவு 11:00 மணிக்கு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பிப்., 18 இரவு 11:00 மணிக்கு மாசி சிவராத்திரி நாளில் வைகை ஆற்றில் இருந்து சங்கிலி சப்பானி தெய்வங்களின் அருளோடு, அங்காள பரமேஸ்வரி கரகம் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தொடர்ந்து பிப்., 22 ல் அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். நேற்று காலை 9:00 மணிக்கு வைகை ஆற்றில் பால் குடங்கள் கட்டப்பட்டு, 11:00 மணிக்கு வேல் குத்தி, பால் குடங்களை சுமந்து பக்தர்கள் கோயிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், விழா கமிட்டினர் செய்திருந்தனர்.