பதிவு செய்த நாள்
25
பிப்
2023
09:02
சென்னை: திருசெந்தூர், பழநி , திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் மாசி பிரம்மோற்சவ விழா இன்று(பிப்.,25) துவங்கியது. கோலாகமாக துவங்கியது. இதனை முன்னிட்டு, கோயில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருசெந்தூர்: மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மாசி மாதம் பவுர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும். இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா இன்று(பிப்.,25) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்போரூர் கந்தசாமி கோயில்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக, செம்பாக்கத்தில், பாலசுப்பிரமணியம் செங்குந்த மரபினர் வகையராவால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொடி கயிறை கொண்டு, கோயில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கொடி ஏற்றப்பட்டது. கோயில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பன்னிரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா துவங்கியது.