ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழா 2ம் நாள் : அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2023 09:02
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளி ஓடம் (தெப்பத்) திருவிழாவின் இரண்டாம் திருநாளான நேற்று மாலை உற்சவர் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி நான்கு உத்திரை வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
25ம் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 26ம் தேதி வௌ்ளி கருட வாகனத்திலும், 27ம் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28ம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும் எழுந்தருளி உள் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7ம் திருநாளான மார்ச் 1ம் தேதி மாலை நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உத்திர வீதிகளில் திருவீதி உலாவந்து இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8ம் நாளில் முக்கிய வைபமான தெப்பத் திருவிழா மார்ச் 2ம் தேதி நடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.