விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாமிப்பேட்டை அங்காள பரமேஸ்ரி அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 18ம் தேதி இரவு 12:00 மணிக்கு சக்தி கரகம் எடுத்த ல், காப்பு கட்டுதல், அம்மன் வீதியுலா மற்றும் 19ம் தேதி இரவு பூவால கப்பரையுடன் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 4:40 மணிக்கு தேர் வடம் பிடித்தல் மற்றும் மாலை 5:00 மணிக்கு மயானக்கொள்ளை நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.