பதிவு செய்த நாள்
25
பிப்
2023
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, நல்லாம்பள்ளியிலுள்ள பாமா ருக்மணி சமேத கரட்டு கிருஷ்ணர் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பொள்ளாச்சி, கோலார்பட்டி சுங்கம் நல்லாம்பள்ளியில் பழமை வாய்ந்த, பாமா ருக்மணி சமேத கரட்டு கிருஷ்ணர் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேக விழாவுக்காக புனரமைப்பு பணிகள் நடந்தது. பணிகள் நிறைவடைந்ததும், கடந்த, 22ம் தேதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து முதற்கால யாக பூஜை, வேதிகார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, சோம பூஜை, திரவியாஹுதி மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 4:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை, காலை, 7:15 மணிக்கு யாத்ரதானம், கடம் புறப்பாடும், காலை, 7:30 மணிக்கு விமான கோபுரத்துக்கு மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று, கலசத்துக்கு புனித நீர் தெளித்ததை கண்டுகளித்தனர்.தொடர்ந்து, மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.