Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ... அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா மார்ச் 7ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா மார்ச் 7ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 பிப்
2023
02:02

நாகர்கோவில்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா மார்ச் 7ம் தேதி நடக்கிறது. 27ம் தேதி கொடியேற்றப்படுகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் செயற்குழு உறுப்பினர்கள் சந்தீப்குமார், நந்தகுமார் ஆகியோர் நாகர்கோயிலில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: திருவனந்தபுரத்தில் பிரசித்திபெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை திருவிழா வரும் 27ம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து திருக்கொடியேற்றமும் நடைபெறுகிறது.

முதல் நாள் விழாவில் கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தோற்றம்பாட்டு என்ற கண்ணகி தேவி வரலாறு பாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாடப்படும் வரலாற்று பாடலுக்கு ஏற்பஅன்றைய தினம் பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்காலை நடைபெறும் மார்ச் 7ம் தேதி கண்ணகி தேவி பாண்டியமன்னனை வதம் செய்து வெற்றியுடன் ஆற்றுகால் தலத்துக்கு வருகை தந்து குடியிருக்கும் பாடல் பாடப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் மூன்றாம் நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர். முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். ஒப்பதாம் நாள் விழா அன்று மாலையில் சிறுவர்களை மிக அழகாக அலங்கரித்து தேவியின் திருநடை முன்பு அழைத்துவருவார்கள். அம்மன் வீதி உலா செல்லும் சமயத்தில் சிறுவர்களின் விலாவின் இரண்டு பகுதிகளிலும் கொக்கி போன்ற உலோகத்தை குத்திக்கொள்வார்கள்.

அம்மன் வீதியுலா முடிந்து மீண்டும் ஆலயத்துக்குள் வந்ததும் விலா பகுதியில் உள்ள உலோககொக்கிகள் அகற்றப்படும். இந்த நிகழ்வு குத்தியோட்டமாகும். மார்ச் 7-ம் தே தி பிரசித்திபெற்ற ஆற்றுகால் பொங்காலை விழா நடைபெறஉள்ளது. காலை சுத்த புண்யாக சடங்கை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பண்டாரஅடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்காலையிடுவார்கள். 2020ம் ஆண்டு பொங்காலை விழாவில் 30 லட்சம் பெண் பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா பெரிய அளவில் நடைபெற வில்லை. அவரவர் வீடுகளில் பக்தர்கள் பொங்கலிட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுவதால் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்காலை யிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம் . திருவிழா தொடங்கும் அன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இன்று நடந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தங்க ... மேலும்
 
temple news
பெரியகுளம்; வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடப்பதற்கு மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
திருத்தல வரலாறு; இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண தலமாகும். பிரமாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar