Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை காட்டூர் விநாயகர், ... பரமக்குடி கருமலையான் கோயில் மாசி களரி விழா பரமக்குடி கருமலையான் கோயில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உத்ஸவம் துவக்கம்: மார்ச் 7ல் தெப்பம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உத்ஸவம் துவக்கம்: மார்ச் 7ல் தெப்பம்

பதிவு செய்த நாள்

27 பிப்
2023
01:02

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 7ல் தெப்பம் நடைபெறும்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும்.  நேற்று முன்தினம் இரவு சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்றுகாலை 7:25 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் திருமண மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப் பட்டம், சக்கரத்தாழ்வார் திருவீதி வலம் வந்தார். எட்டுத் திக்கு பலிபீடங்களிலும் பூஜைகள் நடந்தன. பின்ன கொடிமரத்தின் அருகில் கொடிப் பட்டம், சுவாமி எழுந்தருளல் நடந்தது. பின்னர் சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் பூஜைகள் நடந்து காலை 10:56 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்து தீபாராதனை நடந்தது.  மாலையில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கும்   காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது. இரவில் தங்கப் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை, வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். 6ம் திருநாளில் மாலையில் சூர்ணாபிேஷகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். மார்ச் 6 காலையில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் எழுந்தருளலும்,  தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலுடன் நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar