காரைக்குடியில் ஈஸ்டர் பண்டிக: சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2026 02:04
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சர்ச்சுகளில் இயேசு உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து தவக்காலம் அனுசரிப்பர். அதன்படி காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை சார்லஸ் தலைமையேற்றார். சேசு சபையைச் சேர்ந்த ஜேம்ஸ் திருப்பலி நிறைவேற்றினார். இதேபோல். செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயம், அரியக்குடி வளன் நகர் குழந்தை இயேசு ஆலயம், ஆவுடைப்பொய்கை புனித அந்தோனியார் ஆலயம், மானகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் இயேசு உயிர்ப்பு விழா சிறப்பு வழிபாடு நடந்தது.