திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரமோற்சவம் : குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2023 02:02
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரமோற்சவம், கிருத்திகை மற்றும் வார விடுமுறை நாளான நேற்று, வழக்கத்திற்கு மாறாகபக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
பக்தர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மலைக்கு வந்ததால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திருத்தணி- - அரக்கோணம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோவிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க ஒரு கி.மீ., துாரம் நீண்ட வரிசையில் நின்று, ஐந்து மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதே போல் நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு, அரை கி.மீ., துாரம் நீண்ட வரிசையில் நின்று, மூன்று மணி நேரம் காத்திருந்தது மூலவரை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் தேர்வீதியில் நகரும் நிழற்குடைகள் அமைத்தனர். இதனால் பக்தர்கள் வெயிலில் காத்திருக்காமல் நகரும் நிழற்குடை வழியாக தரிசனத்திற்கு சென்றனர்.