பதிவு செய்த நாள்
01
மார்
2023
11:03
சென்னை: தமிழகத்தில் உள்ள, 146 தொன்மையான கோவில்களில் திருப்பணிகளை துவங்க, மாநில வல்லுனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அறநிலையத்துறை கோவில்களை தொன்மை மாறாமல் திருப்பணிகள் துவங்க அனுமதி அளிக்க, மாநில வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின், 52வது கூட்டம், சென்னையில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், இணை கமிஷனர் ஜெயராமன் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தஞ்சை மாவட்டம், திருவையாறு ஜனமுக்தீஸ்வரர், சுவாமிமலை காசி விஸ்வநாதர், திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் செல்லாண்டியம்மன் கோவில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் நகர், சொக்கலிங்க சுவாமி; காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பாங்குழி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட, 146 கோவில்களில் திருப்பணிகள் துவங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளன. இக்கூட்டத்தில், கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், ஆகம வல்லுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.