தஞ்சாவூர், கும்பகோணத்தில், மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு மகாமக குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பிரசித்தி பெற்ற மாசி மக திருவிழா, கடந்த பிப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மாசி மக தீர்த்தவாரி வரும் 6ம் தேதி மகாமக குளத்தில் நடைபெற உள்ளது. தீர்த்தவாரியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாமக குளத்தில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தண்ணீரை தூய்மை படுத்தவும், மகாமக குளத்தின் படிக்கட்டுகளில் தேங்கியுள்ள குப்பைகளை பற்றி சுத்தம் செய்யும் பணிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.