பதிவு செய்த நாள்
04
மார்
2023
10:03
கருமத்தம்பட்டி: வினோபா நகர் ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கிட்டாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வினோபா நகரில் உள்ள ராஜ கணபதி கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த, 2 ம்தேதி கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் இருந்து, மேள தாளத்துடன் முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. முதல் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, கோபுர கலசம் நிறுவப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, 6:30 மணிக்கு, ராஜ கணபதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், அலங்கார பூஜைக்குப் பின், அன்னதானம் நடந்தது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.