விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2023 01:03
கடலூர் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக பெருவிழா பிப்.25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. 2-ம் தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. மாசி மக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 5 தேர்களில் ஆழத்து விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். முதலில் ஆழத்து விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் என ஒன்றன் பின் ஒன்றாக குறிப்பிட்ட புறப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தி சிவாச்சாரியார்கள் தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம் பிடித்தனர்.