திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகப் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2023 01:03
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது.
அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடந்தது. காலை 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. 10:00 மணிக்கு சுவாமி சந்திரசேகர், கட்டுதேரில் ஆலய உட்பிரகாரத்தில் பக்தர்களின் நமச்சிவாயா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் திருப்பணி துவங்கியதால், விழாக்கள் முழுவதும் கோவில் வளாகத்திலேயே சுவாமி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மேற்கொண்டிருந்தனர். சிவாச்சாரியார்கள் விழாவை முன்னின்று நடத்தினர்.