பரமக்குடி: பரமக்குடியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சனி பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தன காப்பு வெள்ளி கவசம் சாற்றினர். தொடர்ந்து நந்தி வாகனத்தில் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்மன் கோயில் பிரகாரங்களில் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் சிவாய நம கோஷம் வழங்க வழிபட்டனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ நந்திக்கு அபிஷேகம் நடந்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயில் என அனைத்து சிவாலயங்களிலும் சனி பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.