பதிவு செய்த நாள்
05
மார்
2023
01:03
உளுந்தூர்பேட்டை: , உளுந்தூர்பேட்டை, அதையூர், எலவனாசூர்கோட்டை சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள், தீபாராதனை வழிபாடு நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா அதையூர் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோவில், சிக்காடு கிராமத்தில் ஸ்ரீ ஆடிப்பூரம் அம்பிகை உடனுறை திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடைய நாயனார் சிவன் கோவிலில் பிரதோஷம் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. பிரதேசத்தையொட்டி பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபார்தான வழிபாடு நடந்தது. அதேபோல் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவில், எலவனாசூர்கோட்டை கிராமம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்களிவ் சிறப்பு பூஜைகள் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.