ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோவில் மாசி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடந்தது.
பத்து நாள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் மக்களுக்கு காட்சி அளித்தார். தினமும் மாலை 6:00 மணிக்கு பாரம்பரிய இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் 8ம் நாளான நேற்று தெப்போற்ஸவத்தை முன்னிட்டு காலை முதல் கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ரதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 7:00 மணிக்கு மேல் கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ரதத்தில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சார்பில் விழா குழுவினர் செய்திருந்தனர்.