1000 ஆண்டு பழமையான கோவில்கள் திருப்பணிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2023 10:03
மணவாளக்குறிச்சி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின் திருப்பணிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாசிக்கொடை விழாவை முன்னிட்டு நடந்த சமய மாநாட்டில் 9,000 திருவிளக்கு பூஜை நடந்தது. சமய மாநாட்டில்
வில் பங்கேற்ற இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–திருப்பணிகளுக்கு ரூ.50 கோடி தமிழ்நாட்டில் ஒரு வருடத்திற்குள் 40 ஆயிரம் கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அறங்காவலர்கள் குழுக்களை நியமிக்கும் பணி துவங்கி விட்டது. இந்த பணியை விரை வுப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியின் 20 மாத ங்களில் 430 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. 2,400 கோவில்களுக்கு திருப்பணிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கிராமபுற ஆதிதிராவிடர் பகுதிமக்கள் வாழும் பகுதியில் உள்ள 2,500 கோவில்களில் திருப்பணிகள் நடத்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பழமையான கோவில்கள் குமரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமையான 100 கோவில்களில் திருப்பணிகள் செய்ய தலா ரூ.15 லட் சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 78 கோவில்களுக்கு நிர்வாகஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதி 22 கோவில்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கும் பணி நடவடிக்கையில் உள்ளது. 100 கோவில்களில் 2 கோவில் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை சீரமைக்க இந்த வருடம் ரூ.100 கோடி ஒதுக்கி, 58 கோவில்களுக்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 42 கோவில்களுக்கு மதிப்பீடு தயார் செ ய்யப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு முடிந்த அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும். மண்டைக்காடு மண்டைக்காட்டில் நடந்து வரும் கோவில் திருப்பணி ஏப்ரல் மாதம் முடிவடையும். அப்போது கலச பூஜை நடத்தப்படும். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது என துறைக்கு தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பு கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீட்கப்பட்ட நிலங்களில் பாதுகாப்பு முள்வேலி அமைக்கப்பட்டு, அறநிலையத்துறை சொத்து என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் சிலை கடத்தல்கள் நடைபெறவில்லை. 282 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. மேலை நாடுகளில் 38 சிலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை ஊதிய உயர்வு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.