மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையம் புதூர் மந்தை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, ஓராண்டு முடிந்ததை அடுத்து, முதலாம் ஆண்டு விழா, 108 கலச அபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில், ஜடையம்பாளையம் புதூரில், புதிதாக மந்தை மாரியம்மன் கோவில் கட்டி, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, முதலாம் ஆண்டு விழா, 108 கலச அபிஷேகம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் மந்தை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவில் ஜடையம்பாளையம் புதூர் ஊர் கவுடர் பத்திரப்பன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி உட்பட பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். சிவன்புரம் காலனி நாராயணன் அர்ச்சகர் ஹோமோ பூஜைகளை நடத்தினார். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.