மானாமதுரை அங்காள பரமேஸ்வரி கோவில் மாசி மக உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2023 02:03
மானாமதுரை: மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மாசி மக தெப்ப உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இன்று காலை ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்தனர்.இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மாலை உற்சவர் அங்காள ஈஸ்வரி அம்மன் பழைய காளையார் ரஸ்தா, முல்லை நகர், குறிஞ்சி நகர், சேதுபதி நகர்,மருதுபதி நகர், பழைய தபாலாபீஸ் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வீதி உலா சென்ற பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள தண்ணீர் நிறைந்த தெப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த ரதத்திற்கு அம்மன் கொண்டு செல்லப்பட்டு அங்கு தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தெப்பத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விளக்கேற்றி வழிபட்டனர்.உற்சவ விழாவில் மானாமதுரை, பரமக்குடி,மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.