பதிவு செய்த நாள்
08
மார்
2023
02:03
மேட்டுப்பாளையம்: காரமடையில் நடந்த தீ பந்த சேவை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ பந்தங்களை எடுத்து ஆடிச் சென்றனர். காரமடை அரங்கநாதர் கோவில், மாசி மகத் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. விழாவில் தேரோட்டத்துக்கு அடுத்த படியாக, முக்கிய விழா என்றால், தீ பந்த சேவை ஆகும். நேற்று நடந்த இவ்விழாவில் கோவை , ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ பந்தங்களை எடுத்து, நான்கு ரத வீதிகளில் ஆடிச் சென்றனர். பின்பு கோவிலுக்கு சென்று நேர்த்தி கடனை செலுத்தி, அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு சென்றனர். இவ்விழாவில் காரமடை நகர் முழுவதும், ஜமாப் மேளச் சத்தம் விண்ணை முட்டும் அளவில் இருந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என, ஏராளமானவர்கள் ஆடிச் சென்றனர்.