Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடையில் பந்த சேவை ஆயிரக்கணக்கான ... அருவங்காடு ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் அருவங்காடு ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் விஸ்வரூப தரிசனம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் விஸ்வரூப தரிசனம்

பதிவு செய்த நாள்

08 மார்
2023
03:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் விஸ்வரூபம் தரிசனம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரமோற்சவம் கடந்த மாதம், 25ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடந்த இத்திருவிழாவில் நேற்று இரவு தங்க காமகோடி விமானத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று காலை விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இத்திருவிழாவில் அம்மன் தினசரி காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மூன்றாம் நாள் அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். மறுநாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று இரவு அம்மன் தங்க காமகோடி விமானத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இன்று காலை 5:00 மணி முதல் அம்மன் விஸ்வரூபம் தரிசனம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar