பதிவு செய்த நாள்
08
மார்
2023
03:03
குன்னூர்: அருவங்காடு ஐயப்பன் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடந்தது.
குன்னூர் அருகே, அருவங்காடு பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணி நடந்தது. புதிதாக விநாயகர், துர்கை, மாரியம்மன சன்னிதி நிறுவப்பட்டது. கடந்த 3ல், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. சுதர்சன ஹோமம், தீரிஸ்டு ஹோமம், ஆசாரிய வர்ணம், கணபதி பூஜை, பகவதி சேவை, பிரசாத சுத்தி சிரியா, பீஜார் பணம் த்வஸ்தாபனம், ரக்ஷா கன ஹோமம் வாஸ்து கலச பூஜை, புன்யாகம், பிம்ப சுத்தி, கலச பூஜை, சாந்தி ஹோமம், கலசாபிஷேகம், பஞ்சகவ்யம், சாயூஜ்ய ஹோமம், பிம்ப பரிகாரம், நேத்ரோ மீலனம், ஜலாதிவாஸம், தலசுத்தி, பகவதி சேவை, சுவசாந்தி ஹோமம், பிரம்ம கலச பூஜை, நாடி சந்தானம், தத்வ கலசாபிஷேகம், உபதேவதா பிரதிஷ்டை, பிரதிஷடா ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடந்தன. இன்று காலை 5:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, 7:30 மணிக்கு பிரம்ம கலசாபிஷேகம், 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. செண்டை மேளம் முழங்க நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பகல், 12:05 மணிக்கு அன்னதானம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.