சோழவந்தான்: சோழவந்தான் அருகே பேட்டையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா பிப்.28ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து மார்ச் 5ல் பரிவார தெய்வங்களுக்கு மாலை சாற்றி பூ தட்டு ஊர்வலம் நடந்தது. மார்ச் 6ல் அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்வும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று பால் குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை இரவு முளைப்பாரி ஊர்வலமும் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. மார்ச் 9ல் மஞ்சள் நீராடி அன்னதானம் வழங்குகின்றனர். இவ்விழா ஏற்பாடுகளை பேட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.