அவிநாசி: அவிநாசி அடுத்த காசிக்கவுண்டன்புதூரில், ஸ்ரீ புற்று மாகாளியம்மன் மற்றும் ஸ்ரீ அர்ஷவதன நாராயண பெருமாள், ஸ்ரீ கருப்பராயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் சாட்டு விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த காசி கவுண்டன் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ அர்ஷ வதன நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீ கருப்பராய சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் சாட்டு விழா, கடந்த 6ம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கரகம் எடுத்து வருதல்,அடைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று 100ம் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். அதன் பின்னர் கருப்பராய சாமிக்கு கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அலங்கார பூஜை, மஞ்சள் நீராட்டுடன் விழா பூர்த்தி ஆகின்றது. பொங்கல் சாட்டு விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.