சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2012 11:09
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இங்கு செப்.,9 ல் நடந்த உறியடி உற்சவம், இரவு நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. கல்யாணத்தை முன்னிட்டு நாதஸ்வரம் முழங்க பக்தர்கள் சீர்வரிசை ஏந்தி ஊர்வலம் வந்தனர். அங்கு பாலாஜிபட்டர் பெண்வீட்டாரகவும், வெங்கடேஷன் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்து, வேம்புசாஸ்திரி வேதம் ஓத கிருஷ்ணன் சுவாமி,பாமா,ருக்மணிக்கு திருமணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பின் கிருஷ்ணன் சுவாமி தேவியருடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.