பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் இருந்து, 47 ஆம் ஆண்டாக திருச்செந்தூருக்கு சைக்கிள் பயணத்தை முருக பக்தர்கள் துவக்கினர். இக்கோயிலில் மார்ச் 4 தொடங்கி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, பால்குட உற்சவம், அன்னதானம் நடந்தது. நேற்று காலை 5:00 மணி தொடங்கி கொடி வணக்கம், கொடி வழங்குதல் நிறைவடைந்தது. பின்னர் 9:00 மணிக்கு திருச்செந்தூர் நோக்கி குருவடியார் இலக்குமணன் தலைமையில் சைக்கிள் பயணம் துவங்கியது. தொடர்ந்து முதுகுளத்தூர், சாயல்குடி, சூரங்குடி, குளத்தூர், தூத்துக்குடி வழியாக திருச்செந்தூரை அடைவர். மார்ச் 11 அன்று திருச்செந்தூரில் பால்குட விழாவும், மறு நாள் பரமக்குடிக்கு பயணம் துவங்கும். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.