திருப்புவனம் மாரியம்மன் கோயில் 13ம் தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 11:03
திருப்புவனம்: திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி ஆலய பங்குனி பொங்கல் திருவிழா வரும் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான மாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும், பொங்கல் திருவிழா அன்று சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் நேர்த்தி கடன் விரதமிருந்து அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம்கண்பானை, கரும்பு தொட்டில் ஏந்தி வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள், இந்தாண்டு திருவிழா வரும் 13ம் தேதி திங்கள் கிழமை இரவு பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 21ம் தேதி பொங்கல் விழாவும் 22ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரிகள் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.