நங்கநல்லுார், நங்கநல்லுாரில், லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பிரம்மோற்சவம், 3ம் தேதி துவங்கியது. 5ல் வெள்ளி கருட வாகன சேவை நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, தாயாருடன் உற்சவர், காலையில் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து, மாட வீதிகளில் தேர் இழுத்து வந்தனர். இந்த வைபவத்தில் ஏராளமானோர் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர். இரவு, தோட்ட திருமஞ்சனம் நடந்தது. நாளை, கருட விமான சேவையும், 12ம் தேதி மாலை வெட்டிவேர் சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது.