ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே நைனாமரைக்கான் ஊராட்சி சக்திபுரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் கடந்தாண்டு புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு சக்தி விநாயகர், பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு யாக கேள்விகள் செய்யப்பட்டு புனித நீரால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை ஜவகர் ஐயங்கார் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சக்திபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.