திருச்சிவிகையில் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2023 09:03
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழாவில் திருச்சிவிகையில் புறப்பட்டு பெருமாள் திருவீதி வலம் வந்து அருள்பாலித்தார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள இக்கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். முதல் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு உற்சவ பெருமாளும் , தாயாரும் திருச்சிவிகையில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து திருமஞ்சனம், அலங்காரம் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைந்தனர். உற்சவத்தின் இரண்டாம் திருநாளான இன்று காலை 11.03.23 கற்பக விருட்சம், மாலை அனுமந்த வாகனத்திலும், மூன்றாம் திருநாளில் 12.03.23 அதிகாலை பல்லக்கில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடத்திருக்காவிரி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் அதிகாலை 13.03.23 அன்று புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருவெள்ளரை திருக்கோயிலின் கண்ணாடி அறை சேருகின்றார். உற்சவத்தின் நான்காம் நாளில் 13.03.23 அன்று இரவு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு திருவீதிகள் வலம் வந்து கண்ணாடி அறை சேருகிறார். இந்த உற்சவம் வரும் 20.03.2023 முடிய நடைபெறுகிறது.