பழநி மலைக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோயில் உற்பிரகாரத்தில், உற்சவர்கள் வைக்கும் மண்டபங்கள் உள்ளன. கோயிலில் சின்னகுமாரசுவாமி, சண்முகர், நடராஜர் உற்சவர்கள் உள்ளன. சின்னகுமாரசுவாமி உற்சவர் தினமும் தங்கதேரில் எழுந்தருள்வார். வள்ளி, தெய்வானை உடன் சண்முகர் மலைக்கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருள்வார். தற்போது சண்முகர் மண்டபத்தின் சுவர்களில், 250 கிலோ வெள்ளியை பயன்படுத்தி தகடுகள் பொருத்தப்படுகிறது. நன்கொடையாளர் மூலம் ரூ.ஒரு கோடி பொருட்செலவில் வெள்ளிதகடுகள், பதிக்கப்பட்டு மேருகேற்றப்படுகிறது. மேலும் நடராஜர் மண்டபங்களுக்கும் வெள்ளி தகடுகள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.