பதிவு செய்த நாள்
13
மார்
2023
09:03
கரூர்: கரூரில் கோவில் கோசாலையில், பசுவுக்கு வளைகாப்பு நடத்தி, பெண்கள் வழிபட்டனர். கரூரில், வாங்கல் சாலை, தண்ணீர் பந்தல்பாளையத்தில், 150 ஆண்டுகள் பழமையான நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு கோசலையில் வளர்க்கப்படும் ஒரு பசுவுக்கு, நேற்று வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து மூலவர் நவநீத கிருஷ்ணனுக்கு, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து வளைகாப்புக்கு தேவையான பொருட்களை, பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். பசுவுக்கு மாலை, வளையல்கள் அணிவித்தனர். பின் ஏழு வகையான கலவை சாதம், பழங்கள் ஊட்டி, பூஜை செய்து வணங்கினர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.