மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2023 08:03
நாகர்கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது. பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை விழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் தேதி ஆறாம் நாள் விழாவில் இரவு வலிய படுக்கை என்ற மகாபூஜை நடைபெற்றது. 13–ம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் நடைபெற்றது. நிறைவு நாளான 14–ம் தேதி நள்ளிரவு ஒடுக்குபூஜை நடைபெற்றது. சாஸ்தான்கோயில் வளாகத்தில் இருந்து சோறு, அவியல், துவரன் உள்ளிட்ட பதார்த்தங்கள் 11 பானைகளில் வைக்கப்பட்டு அதை வெள்ளை துணியால் மூடி 11 பூஜாரிகள் சுமந்து வந்து அம்மனுக்கு படைத்து தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையின் போது நசப்தம் பாலிக்கப்படுவது சிறப்பாகும். நேற்று அதிகாலை கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது.