காளஹஸ்தி கருப்பு கங்கை அம்மன் திருவிழா : பக்தர்கள் சீர் வரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2023 09:03
காளஹஸ்தி: திருப்பதி. காளஹஸ்தி பகதூர் பேட்டையில் கருப்பு கங்கை அம்மன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் கங்கை அம்மனுக்கு (சாரே) சீர் வரிசை பொருட்கள் (பூஜை பொருட்கள்) சமர்பித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள உள்ள பகதூர் பேட்டையில் வீற்றிருக்கும் சக்தி தேவியான ஸ்ரீ கருப்பு கங்கை அம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உள்ளூர் பக்தர்கள் கறுப்பு கங்கை அம்மனுக்கு மூலவர் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் தங்களின் சிறப்பு வழிபாடுகள் நடத்தியதோடு நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து ஆடு கோழி போன்ற பலி வழிபாடுகளையும் சமர்பித்து பாரம்பரிய முறையில் கறுப்பு கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். கறுப்பு கங்கை அம்மன் திரு விழாவை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கறுப்பு கங்கை அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு சீர் வரிசை பொருட்களை தலை மீது சசுமந்தபடி ஊர்வலமாக வந்து சம்பிரதாய முறைப்படி சமர்ப்பித்தனர் .பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தியை தரிசித்தனர். ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரத்தில் காட்சியளிக்கும் சக்தி கோயில்களில் வீற்றிருக்கும் அம்மன் கள் உள் பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் சாரே வழங்கும் முறையை ஆன்மீக சிந்தனை பெருக்கும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் நடைபெற்று வருவதாக அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக.சீனிவாசுலு தெரிவித்தார்.