பதிவு செய்த நாள்
17
மார்
2023
06:03
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தியில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்றான காளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் துணை கோவிலான பிரசன்ன வரதராஜசுவாமி கோவில் புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (17.3.2023) வெள்ளிக்கிழமை சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாலு தலைமையில், நகர மக்கள், பக்தர்கள், வருவாய்த்துறை மற்றும் போலீசார் முன்னிலையில் மூலவர் சிலையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பழமையான கோவில் என்பதால் இதனால் மிகவும் கவனமாக, சிலையின் அடிப்பகுதியில் நீர்மட்டம் வரை மண் அகற்றப்பட்டு, மூலவர் சிலையை வெளியே எடுக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் கோவிந்த நாமம் முழங்க சிலை அகற்றும் பணியை மேற்கொண்டனர், சிவன் கோயில் அர்ச்சகர்கள் தலைமையில் பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் நவதானியங்களில் சிலையை பாதுகாக்கப்பாக வைத்தனர்.முன்னதாக மூலமூர்த்தி இருக்கும் இடத்தை 10 அடி ஆழத்திற்கு தோண்டி சோதனை செய்தனர்.
இதுகுறித்து அஞ்சூரு.தாரக சீனிவாசலு கூறியதாவது: காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோவில், எம்எல்ஏ மதுசூதன் ரெட்டியின் உத்தரவுப்படி, நான்கு கோடி ரூபாய் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கோயிலில் உள்ள கல்(பாறாங்கல்) கட்டிடங்கள் முற்றிலும் வலுவிழந்து போனதால், மேலும் இரண்டு, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிய கல் கட்டிடம் அமைத்து, ஆன்மீக (அழகுடன் )புதிய கோவில் புனரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இம்மாதம் 23ம் தேதி பூமி. கோவில் புனரமைப்புக்கும் பணிக்கான பூமி பூஜை நடக்கும் என்றும் வரும் வைகுண்ட ஏகாதசிக்குள் கோயில் மகாகும்பாபிஷேக விழா நடக்க முயற்சி எடுக்கப்படும் என்றனர். இந் நிகழ்ச்சியில் சிவன் கோயில் சிலர் பொறியாளர் முரளிதர் மற்றும் சீனிவாசன் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கிஷோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.