பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில், சதுர்த்தியை முன்னிட்டு(செப்.,18) தேரோட்டமும், விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இங்கு, செப்.10ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும், சுவாமி வெள்ளி கேடகத்தில் வீதி உலா நடைபெறும். இரவு, சுவாமி புறப்பாடு நடக்கும்.
தேரோட்டம்: விழாவின், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு (செப்.,18ல்) காலையில் அலங்கரித்த தேரில், சுவாமி எழுந்தருள்வார். மாலை, கற்பக விநாயகர், சண்டிகேஸ்வரருக்கென தனித்தனியாக தேரோட்டம் நடக்கும். பெண்கள், தேர் வடம் பிடித்து இழுப்பர். அன்று, மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். சந்தனக்காப்பு அலங்காரம் ஆண்டிற்கு ஒரு முறை நடப்பது இங்கு விசேஷம். செப்.,19ல் தீர்த்தவாரி, இரவு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவுபெறும்.