நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, 18 அடி உயர ஆஞ்சநேயர்சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறு அன்று, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடக்கிறது. அதன்படி பங்குனி முதல் ஞாயிறான நேற்று காலை, 9:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11 மணிக்கு நல்லெண்ணெய், பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.